அமெரிக்காவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தால் சுமார் 10 வீடுகள் சேதம்!

0 1984

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் வீடு ஒன்றில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் அந்த வீடு மட்டுமின்றி அருகில் உள்ள மேலும் 2 வீடுகள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களும் தீக்கிரையாகின.

விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வுகளால், சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் கண்ணாடி ஜன்னல்களும், கதவுகளும் உடைந்து சிதறின.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments