தனியாக வசித்து வந்த முதிய தம்பதியை கவனித்துக் கொள்ள வந்து, 100 சவரன் நகையை திருடிய நபர்

0 6328

சென்னை அடையாறில் தனியாக வசிக்கும் மூதாட்டியின் வாழ்வாதாரத்துக்காக கணவர் கொடுத்துவிட்டுச் சென்ற சுமார் 100 சவரன் நகைகள் மற்றும் பணத்தை அவர்களை கவனித்துக் கொள்வதற்காக வந்த உறவுக்கார நபரே திருடிச் சென்றுள்ளான்.

அடையாறு இந்திரா நகர் 5வது தெருவில் வசித்து வரும் ஞானமணி என்ற அந்த மூதாட்டியின் கணவர் கனகராஜ், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மயக்கவியல் துறை பேராசியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கனராஜ் - ஞானமணி தம்பதிக்குக் குழந்தைகள் இல்லாத நிலையில், கடந்த ஜூன் மாதம் வயது முதிர்வால் கனகராஜ் காலமானார்.

அவரது இறப்புக்கு சில மாதங்களுக்கு முன் தம்பதி இருவருமே உடல்நலம் பாதித்து படுத்த படுகையாகியுள்ளனர். அப்போது அவர்களை கவனித்துக் கொள்வதற்காக வந்த தூரத்து உறவினரான கனக சண்முகம் என்ற நபர் வீட்டிலிருந்த நூறு சவரன் நகை, 3 லட்ச ரூபாய் பணம், பென்ஷன் ஆவணங்கள் என அனைத்தையும் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அவற்றைத் திருப்பிக் கேட்டபோது தர முடியாது என்றும் சிபிஐயில் கூட புகாரளித்துக் கொள் என்றும் மூதாட்டியிடம் கனக சண்முகம் மிரட்டியதாக கூறப்படுகிறது.... 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments