ஃபுகுஷிமா அணு உலையின் கதிரியக்க கழிவு நீரை கடலில் வெளியேற்ற எதிர்ப்பு..
ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் வெளியேற்றும் ஜப்பானின் திட்டத்திற்கு எதிராக தென்கொரியா முழுவதும் பல்வேறு நகரங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான கொரிய கூட்டமைப்பு, ஜப்பானின் திட்டத்திற்கு எதிராக மூன்றரை லட்சம் மக்களிடம் கையெழுத்து பெற்றுள்ளது.
ஜப்பானின் நடவடிக்கையால் கடல் உணவுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என தென்கொரிய மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஜப்பானை பின்பற்றி பிற நாடுகளும் இதுபோன்ற செயலில் ஈடுபடலாம் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கதிரியக்க கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் வெளியேற்ற ஜப்பானுக்கு ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு குழு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments