கடற்கரை ஒழுங்குமுறை வரைபடத்தில் சுமார் 6,000 மக்கள் வசிக்கும் தூத்தூர் விடுபட்டது ஏன்? -மீனவர்கள்
மத்திய அரசு வெளியிட்ட கடற்கரை ஒழுங்குமுறை வரைபடத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூர் கிராமம் இடம் பெறவில்லை என்று மீனவர்கள் புகார் கூறியுள்ளனர்.
15 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட அந்த படத்தில், கடற்கரை கிராமங்களில் முக்கிய கிராமமான தூத்தூர் விடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தனி ஊராட்சியான தூத்தூரில் சுமார் 6 ஆயிரம் பேர் வசித்து வருவதாகவும் பள்ளி, கல்லூரிகள், வங்கிகள் செயல்பட்டுவரும் தங்கள் ஊரை வரைபடத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Comments