கனடாவில் இந்து கோயிலை சேதப்படுத்திய 'காலிஸ்தான்' ஆதரவாளர்கள்
கனடாவில் மேலும் ஒரு இந்து கோயிலை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்தியத் தூதரக அதிகாரிகளைத் தேடப்பட்டுவரும் குற்றவாளிகள் போல் சித்தரிக்கும் போஸ்டரை ஓட்டிச் சென்றனர்.
பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக அறிவிக்கக்கோரி போராடிவரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடாவில் உள்ள இந்து கோயில்களை அவ்வப்போது சேதப்படுத்திவருகின்றனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பழமையான லஷ்மி நரசிம்மன் கோயிலுக்கு நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த 2 பேர் காலிஸ்தான் ஆதரவு போஸ்டர்களை ஒட்டி புகைப்படம் எடுத்துவிட்டுச் சென்றனர்.
கடந்த ஜூன் மாதம், காலிஸ்தான் டைகர் அமைப்பின் தலைவர் ஹர்தீப் நிஜார், கனடாவில் சுட்டுகொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசுக்குத் தொடர்பு உள்ளதா என கனடா அரசு விசாரிக்க வேண்டும் என அந்த போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது.
Comments