சந்தையில் பரவலாக கிடைக்கும் பொதுமருந்துகளை பரிந்துரைக்காத மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் -தேசிய மருத்துவ ஆணையம்
சந்தையில் பரவலாக கிடைக்கும் பொதுமருந்துகளை பரிந்துரைக்காத மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, அனைத்து மருத்துவர்களும் பொது மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்றும், தவறினால் அபராதம் விதிக்கப்படுவதுடன், பயிற்சி செய்வதற்கான உரிமமும் இடைநிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் குறிப்பிட்ட பிராண்ட் பொது மருந்துகளை பரிந்துரை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவர்களும், அவரது குடும்பத்தினரும், மருந்து நிறுவனங்கள் அல்லது அதன் பிரதிநிதிகளிடமிருந்து பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றைப் பெறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments