சென்னையில் யூட்யூப் சப்ஸ்க்ரைப் மூலம் சம்பாதிக்கலாம் என மோசடி... 5 மோசடி பேர்வழிகள் கைது .
யூடியூபில் சப்ஸ்கிரைப் செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை முகப்பேரை சேர்ந்த நபர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், வெளிநாட்டு எண்ணில் இருந்து, வாட்ஸ் அப் மூலமாக விளம்பரம் ஒன்று வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அதில் யூடியுப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என கூறி விளம்பரம் செய்யப்பட்டிருந்ததால், தாம் சப்ஸ்க்ரைப் செய்ததாகவும், இதையடுத்து தம்மை அனுஷ்யா என்பவர் தொடர்பு கொண்டு பேசியதை தொடர்ந்து, முதலில் சிறு தொகைகளை செலுத்தி அதனை திரும்ப பெற்ற நிலையில், உச்சகட்டமாக 25 ஆயிரம் செலுத்தி மீண்டும் ரூபாய் பெற முயன்று 18 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார் ஐந்து நபர்களை கைது செய்தனர் இவர்களிடம் நடத்திய விசாரணையில் வெளிநாட்டில் இருக்கும் மோசடி நபர்களுக்கு வங்கிக் கணக்கை தொடங்கி கொடுத்து, மலேசியாவில் உள்ள மோசடி கும்பலுக்கு பணத்தை பரிமாற்றம் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்ததும் இவர்களுக்கு உச்சபட்சமாக 50,000 ரூபாய் வரை கமிஷன் கொடுக்கப்பட்டதும் தெரிய வந்தது.
Comments