பாகிஸ்தானில் புதிய இடைகால அரசு இன்று பதவியேற்பு...
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு தேர்தலுக்கு வழிவிட்டு பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய இடைக்கால அரசு இன்று பதவியேற்க உள்ளது.
அன்வர் உல் ஹக் காக்கர் என்ற பலூசிஸ்தான் எம்.பி. பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இடைக்கால அரசு குறித்து ஷெபாஸ் ஷெரீப் எதிர்க்கட்சித் தலைவர் ராஜா ரியாசுடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இருதரப்பினரின் ஒப்புதலுடன் அன்வர் உல் ஹக் பதவியேற்க உள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அலி இடைக்காலப் பிரதமராக அன்வர் உல் ஹக்கை நியமனம் செய்ய ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments