சரக்கடிச்சோமா சத்தமில்லாம வந்தோமான்னு இல்லன்னா இப்படித்தான் நடக்கும்..! பாண்டிச்சேரி பரிதாபங்கள்

0 3386

போதையில்  நண்பரை பீர் பாட்டிலால் தாக்கி விட்டு, வேறு யாரோ தாக்கியதாக கூறி பாரில் பாட்டிலை வீசி ரகளை செய்த தமிழக குடிகார ஆசாமியை புதுச்சேரி போலீசார் வெளுத்தெடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

தொப்பியை தட்டி விட்டதால், குடிகார ஆசாமிகளை ஓங்கி அடிச்சா ஒன்பதரை டன் வெயிட்ரா... என்று போலீசார் ஓங்கி ஓங்கி அப்பிய காட்சிகள் தான் இவை..!

திண்டிவனம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், தனது நான்கு நண்பர்களுடன் புதுச்சேரி மாநிலம் சேதராப்பட்டில் உள்ள மதுபானக் கடையில் மது அருந்தியுள்ளார். உச்சகட்ட மது போதையில் உண்டான தகராறில் இருவர் அங்கிருந்து ஓடிவிட தன்னுடன் இருந்த நண்பரை மணி பீர் பாட்டிலால் மண்டையில் அடித்துள்ளார்.

பின்னர் மது அருந்திக் கொண்டிருந்தவர்களை நோக்கி நண்பனை எப்படி தாக்கலாம் ? என்று கேட்டு பாட்டிலை வீசி தாக்குதல் நடத்தினார்

மண்டையில் ரத்தம் சொட்டிய நிலையில் உடன் வந்த நண்பர், அவரை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல, மண்டையை உடைத்த மணிகண்டன், சட்டையை கழட்டி ரத்தத்தை துடைத்துக் கொண்டிருந்தார்

தகவல் அறிந்து விரைந்து வந்த காவலர்கள் , மது போதையில் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்த மணிகண்டனை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முற்பட்ட போது அருகில் நின்ற போலீஸ்காரர் தொப்பியை தட்டி விட்டதால் ஆத்திரம் அடைந்த மற்றொரு போலீஸ்காரர் , இரு குடிகார ஆசாமிகளையும் அடி கும்மி எடுத்தார்

பாண்டிச்சேரிக்கு போனோமா ... சரக்க குடிச்சோமா... சத்தம் இல்லாம திரும்பி வந்தோமான்னு இல்லாமல் சண்டை செய்ததால் , பயங்கர ஆயுதங்கள் வைத்து ரகளை ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். தனக்கு தானே பீர் பாட்டிலால் சூனியம் வைத்துக் கொண்ட தமிழக குடிகாரர் புதுச்சேரியில் கம்பி எண்ணி வருகின்றார்..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments