சென்னையில் நடைபெற்று வந்த ஆசிய சாம்பியன் டிராபி ஹாக்கி போட்டியில் 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி

0 4975

சென்னையில் நடைபெற்று வந்த ஆசிய சாம்பியன் டிராபி ஹாக்கி போட்டியில் இந்திய அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இறுதி போட்டியில் இந்திய அணியும் மலேசிய அணியும் மோதின. விறு விறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் மலேசிய அணி 3-1 என முன்னிலை பெற்று இருந்தது.

இரண்டாம் பாதியில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்து மலேசிய அணியை திணறடித்தனர். இறுதியில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வென்று பட்டத்தை தட்டி சென்றது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி வாழ்த்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments