சிக்ஸ் பேக் இல்ல.. 20 பேக்...! தொடை ஏன் பெருசா இருக்கு..? குருவி.. பெரிய ஆளுய்யா..! கட்டு கட்டாக சிக்கிய ரூ. 24 லட்சம்

0 6486

கோவையை அடுத்த வாளையார் சோதனை சாவடியில் 24 லட்சம் ரூபாயை கட்டு கட்டாக உடலில் லைப் ஜாக்கெட் போல கட்டிக் கொண்டு எடுத்து வந்த குருவியை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

சட்டைக்குள்ள பை.... பைக்குள்ள பணம்... சிக்ஸ் பேக் கேள்வி பட்டிருப்பீங்க... 20 பேக் தெரியுமா.. பணப் பைகளோடு பறந்து வந்த பலே குருவி இவர் தான்..!

தமிழக கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடியில், கோவையில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற கேரள அரசு பேருந்தில் பயணித்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். பேருந்தில் பயணம் செய்த ஒருவர் மட்டும் சந்தேகத்திற்கு இடமான வகையில் அமர்ந்திருந்தார். அவரை கீழே இறக்கி சுங்கச்சாவடி அறைக்குள் அழைத்துச் சென்று முழுமையாக சோதனையிட்டனர். அவரது சட்டையை கழற்றி பார்த்ததில் நடிகர் பாக்யராஜ் நடித்த ருத்ரா திரைப்படத்தில் பணம் கடத்தும் காட்சியை நிஜத்தில் அரங்கேற்றியதைக் கண்டு அதிர்ந்தனர்.

சாதாரண நபர் போன்று சட்டை வேஷ்டி அணிந்திருந்த அந்த நபர், சட்டைக்குள் லைப் ஜாக்கெட் போன்ற ஒரு ஆடையை அணிந்து இருந்தார். அதில் 20க்கும் மேற்பட்ட பைகள் இருந்தன. அதற்குள் லட்சக்கணக்கில் பணத்தை கட்டு கட்டாக செருகி வைத்திருந்தார்.

கால் தொடை பெருசா இருக்கே என்று நினைத்து சோதித்த போது தொடையில் சில கட்டு பணத்தை அவர் மறைத்து வைத்திருந்ததைக் கண்டனர் அதிகாரிகள்.

அனைத்து பகுதிகளிலும் கட்டு கட்டாக மறைத்து வைத்திருந்த மொத்த பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அந்த நபர் மகாராஷ்டிராவை சேர்ந்த தானாஜி யஸ்வந்த் என்பதும், கோவையிலிருந்து எர்ணாகுளத்திற்கு கமிஷன் அடிப்படையில் குருவியாக 24 லட்சத்து 78 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை உடலில் மறைத்து கொண்டு சென்றதும் தெரியவந்தது. எர்ணாகுளத்தில் தனது அடையாளத்தை வைத்து மற்றொரு நபர் அந்த பணத்தை பெற்றுக் கொள்வார் என்றும் அவர் தெரிவித்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்து கேரள போலீசார் வசம் ஒப்படைத்தனர் சுங்கத்துறை அதிகாரிகள்.

இவர் ஹவாலா கடத்தலில் ஈடுபட்டாரா ? அல்லது சமூக விரோத கும்பலுடன் தொடர்பு உள்ளதா ? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments