போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் தாமுவின் உருக்கமான பேச்சினால் தேம்பி தேம்பி அழுத பெண் காவலர் .

0 3164

சென்னையில் நடைபெற்ற போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெற்றோர்கள் படும் கஷ்டம் குறித்து நடிகர் தாமு பேசிய போது பெண் காவலர் உட்பட அனைவரும் கண் கலங்கினர்.

கொளத்தூரில் போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும் என்ற தலைப்பில் ஐசி.எப் அம்பேத்கர் மன்றத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் தாமு, பள்ளி மாணவர்களிடையே போதை பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் மிமிக்ரி மூலமாக எளிதில் புரியும் வகையில் உரிய விளக்கங்களுடன் எடுத்துரைத்தார்.

பிறப்பு முதல் கல்லூரி பருவம் வரை பிள்ளைகளை பெற்றோர்கள் பாதுகாப்பது மற்றும் மரியாதை தருவது தொடர்பாக மாணவர்களிடையே அவர் உருக்கமாக பேசிய போது, அரங்கத்தில் இருந்த ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் கண் கலங்கினர்.

அதிலும் குறிப்பாக அங்கு பாதுகாப்பில் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் தாமுவின் பேச்சை கேட்டு தேம்பி தேம்பி அழுதார்.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments