2 நாள்.. ரூ 124 கோடி சினிமா பாக்ஸ் ஆபீஸ்... ‘ஜெயிலர்’ கண்ட்ரோல்..! அந்த கோடி பேரு இவங்க தான்...!

0 4925

ஜெயிலர் படம் 2 வது நாளில் உலக அளவில் 100 கோடி வசூலை எட்டிப்பிடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் 7000 திரையரங்குகளில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

துபாயில் உள்ள ஐக்கிய அரபு அமீரக ரசிகர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருடனும் திரையரங்கிற்கு சென்று கேக் வெட்டி செண்டை மேளம் முழங்க கொண்டாடி உள்ளனர்

தமிழகத்தில் வேலை நாளில் வெளியாகி முதல் நாளில் 24 கோடிகளை ஜெயிலர் படம் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகம் 10 கோடி , கேரளம் 6 கோடி , ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 10 கோடி வெளி நாடுகளிலும் வசூலை வாரிக்குவித்து வரும் ஜெயிலர் முதல் நாள் வசூல் 72 கோடிகளை குவித்திருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் 2 வது நாள் 52 கோடிகளை வசூலித்து 124 கோடி ரூபாயை தாண்டிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் முதல் நாளில் மட்டும் 7 கோடிகளை வசூலித்து , அங்கு அதிகமாக வசூலித்ததாக கூறப்பட்ட வாரிசு படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் முறியடித்தது.

திங்கட்கிழமை தவிர்த்து அடுத்தடுத்து 3 நாட்கள் விடுமுறை நாட்களாக இருப்பதால் வரும் நாட்களில் ஜெயிலர் படத்தின் வசூல் இன்னும் இருமடங்காக உயரும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments