பிரதமர் மோடி இம்மாத இறுதியில் கிரீஸ் நாட்டுக்குப் பயணம்
பிரதமர் மோடி இம்மாத இறுதியில் கிரீஸ் நாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கச் செல்லும்போது, அந்தப் பயணத்துடன் கிரீஸ் பயணத்தையும் அவர் மேற்கொள்கிறார்.
1983ம் ஆண்டில் பிரதமராக இருந்த இந்திரா காந்தியைத் தொடர்ந்து, 40 ஆண்டுகளுக்குப் பின் அந்நாட்டுக்குச் செல்லும் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் மற்றும் சைப்ரஸ் போன்ற விஷயங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை கிரீஸ் தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறுவதற்கான இந்தியாவின் முயற்சிக்கு கிரீஸின் ஆதரவு உள்ளது.
இந்தியா முன்னெடுத்த சர்வதேச சூரியஒளி கூட்டமைப்பில் கிரீஸ் இடம்பெறும் வகையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
Comments