தமிழகத்துக்கு தண்ணீர் தரவேண்டும் என்ற மனநிலை கர்நாடகாவுக்கு இல்லை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
காவிரியில் கர்நாடகா தமிழகத்திற்கு உரிய பங்கை தர மறுப்பதால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விரைவில் வழக்கு தொடுக்க இருப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்தின் தேவை கடுமையாக வலியுறுத்தப்பட்டதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் கர்நாடகா விநாடிக்கு 15 ஆயிரம் கன அடிக்கு பதில் ஆகஸ்ட் 22 வரையில் 8 ஆயிரம் கனஅடி மட்டும் தான் தர முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள 4 அணைகளையும் சேர்த்து மொத்த கொள்ளளவான 114.571 டி.எம்.சி.யில் 93.535 டி.எம்.சி. தண்ணீர் தேங்கிக் கிடப்பதாக சுட்டிக்காட்டிய அவர், நீர் இல்லை என்ற நிலையோ, தமிழகத்திற்கு தண்ணீர் தரவேண்டும் என்ற மனநிலையோ கர்நாடகத்திற்கு இல்லை என்று கூறியுள்ளார்.
Comments