நாடாளுமன்றத்தில் திமுகவினரை பிரதமர் மோடியும் நிர்மலா சீதாராமனும் கிழித்து தொங்கவிட்டுள்ளனர் - டி.ஜெயக்குமார்
நாடாளுமன்றத்தில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் திமுகவை கிழித்து தொங்கவிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மாலை முரசு நாளிதழ் நிறுவனர் இராமசந்திர ஆதித்தனாரின் 89வது பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, தி.மு.க. ஆட்சியின் போது சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவமதிக்கப்பட்டது குறித்து நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு பேசியிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.
Comments