அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்துசேரும் கஞ்சா போதைப்பொருள் - முதலமைச்சர்
தமிழ்நாட்டில், போதை பொருட்கள் புழக்கம் ஒழிய வேண்டும் என்றால், காவல்துறையினர் மட்டுமின்றி, அனைவரும் ஒன்றுசேர்ந்து, போதை பொருட்கள் சங்கிலியை உடைக்க வேண்டும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆகஸ்ட் 11ஆம் தேதி போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" என்ற தலைப்பில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் தலைமையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் போதை பொருள் கடத்தல் குறைந்துள்ளது என்றாலும், முற்றிலுமாக குறைந்து விட்டது என்று தாம் சொல்லவில்லை என்றார்.
தமிழ்நாட்டில், கஞ்சா விளைவிக்கப்படவில்லை என்றும், ஆந்திரா, கேரளா, கர்நாடக மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கஞ்சா தமிழகத்திற்குள் வருவதாக, முதலமைச்சர் கூறினார்..
Comments