அமெரிக்கா ஹவாய் வனப்பகுதியில் பற்றிய பெரு நெருப்பினால் 1,700 வீடுகள் எரிந்து நாசம் 53 பேர் பலி ...

0 1410

அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. மயுய் என்ற இடத்தில் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக ஆயிரத்து 700க்கும் அதிகமான கட்டடங்கள் நெருப்பில் எரிந்த நாசமாகின.

வரலாற்று நகரமான லஹைனா 80 விழுக்காடு அழிந்துவிட்டதாக ஹவாய் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக இருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில் ஹவாய் காட்டுத் தீ பெரும் இயற்கைப் பேரழிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து எரிந்து வரும் நெருப்பு காரணமாக 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அடிக்கடி காட்டுத் தீயால் பாதிக்கப்படும் கலிபோர்னியாவில் இருந்து ஹவாய்க்கு மீட்பு மற்றும தேடுதல் வேட்டைக்கு குழுக்களை அனுப்புவதாக கலிபோர்னிய ஆளுநர்  தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments