47 ஆண்டுகளுக்குப் பின்னர் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது ரஷ்யா.

0 1602

47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா நிலவுக்கு தனது விண்கலத்தை அனுப்பியுள்ளது.

லூனா 25 என்ற விண்கலத்தை ஐரோப்பிய நாடுகளின் உதவியின்றி ரஷ்யா ஏவியது. வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து இந்த விண்கலம் செலுத்தப்பட்டது.

800 கிலோ எடைகொண்ட லேண்டர் அடுத்த 5 நாட்களில் சந்திரனின் சுற்றுப்பாதையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்றில் முதன்முறையாக நிலவின் தென்துருவப் பகுதியில் 3 முதல் 7 நாட்களுக்குள் தரையிறங்கும் என ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சந்திரயான்- விண்கலம் நிலவின் தெற்குப் பகுதியில் தரையிறங்க உள்ள நிலையில், ரஷ்யாவின் லுனா-25 விண்கலமும் அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments