இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசின் அதிகாரப்பூர்வ சிறப்பு நாணயம் வெளியீடு

0 1520

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டலைக் குறிக்கும் வகையில் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இங்கிலாந்து நாணயங்களை அதிகாரப்பூர்வமாக தயாரிக்கும் தி ராயல் மிண்ட் நிறுவனம் கூறுகையில், நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகம் மற்றும் வங்கிக் கிளைகளில் 50பென்ஸ் சிறப்பு நாணயங்களை பெறலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்த நாணயம் மன்னரின் அதிகாரப்பூர்வ உருவப்படம் பொறித்த புழக்கத்தில் வந்துள்ள 2வது நாணயமாகும். கடந்த ஆண்டு டிசம்பரில் இரண்டாம் எலிசபெத் ராணியில் இருந்து மூன்றாம் சார்லஸ் மன்னராக வரலாற்று மாற்றத்தைக் குறிக்கும் வகையில் முதல் நாணயம் வெளியிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments