போதைப்பொருள் குறித்து புகாரளிக்க புதிய எண் அறிவிப்பு... வாகனங்களில் ஸ்டிக்கரை ஒட்டி காவல்துறை விழிப்புணர்வு
போதை பொருட்கள் விற்பனை குறித்து 10581 என்ற எண்ணிற்கு மக்கள் தகவல் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
சென்னையில் அண்ணா நகர் ரவுண்டானா சிக்னலில், போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது பேசிய காவல் துணை ஆணையர் ரோஹித் நாத், மக்கள் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து அறிந்து கொள்ளவும், புகார் அளிக்கவும் 10581 என்ற எண்ணை எந்நேரமும் தொடர்புகொள்ளலாம் என்றார்.
Comments