வறட்சியால் பாதிக்கப்பட்ட 6 மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் ஒதுக்கி அரசாணை... எந்தெந்த மாவட்டங்கள்?

0 3799
வறட்சியால் பாதிக்கப்பட்ட 6 மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் ஒதுக்கி அரசாணை... எந்தெந்த மாவட்டங்கள்?

தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, 181 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதாவது, கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழையின் போது, குறைந்த அளவு மழைப் பதிவான புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், 25 வட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டன.

அங்கு ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 832 ஹெக்டேர் விவசாய நிலங்கள் தண்ணீரின்றி பாதிப்படைந்தன. இதனால் ஒரு லட்சத்து 87 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு, அவரவர் இழப்பை பொறுத்து நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments