ஈக்வடாரில் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், எதிர்கட்சி அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளர் வில்லவிசென்சியோ சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வரும் பத்தாம் தேதி அங்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருந்த நிலையில், தலைநகர் கீட்டோவில் நேற்று மாலை பிராச்சாரத்தை முடித்துக்கொண்டு காரில் ஏறியபோது, மர்ம நபரால் வில்லவிசென்சியோ சுட்டுக்கொல்லப்பட்டார்.
போலீசார் பதிலுக்கு சுட்டதில் படுகாயமடைந்த மர்ம நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பதவிக்கு வந்ததும், ஊழல் செய்துவரும் ஆளும் கட்சியினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக பிரச்சாரம் செய்துவந்த வில்லவிசென்சியோ, அதிபர் தேர்தலில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
Comments