7-இல் இருந்து 72 வரை..! திருவிழாக் கோலம் பூண்ட திரையரங்குகள்! 'ஜெயிலர்' கா ஹுக்கும்..!!

0 3048
ரஜினி காந்த் நடித்துள்ள ஜெயிலரின் முதல் நாள் காட்சிகளைக் காண திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் பட வெளியீட்டை திருவிழா போல கொண்டாடினர்.

ரஜினி காந்த் நடித்துள்ள ஜெயிலரின் முதல் நாள் காட்சிகளைக் காண திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் பட வெளியீட்டை திருவிழா போல கொண்டாடினர்.

சென்னை ஆல்பர்ட் திரையரங்குக்கு வந்திருந்த ரஜினி ரசிகர்கள், ரஜினியிடம் இருந்து சூப்பர் ஸ்டார் பட்டத்தை யாராலும் பறிக்க முடியாது என்றனர்.

சென்னை புறநகரில் உள்ள ரோஹினி, வெற்றி போன்ற திரையரங்குகளில் முதல் காட்சியைக் காண குவிந்த ரசிகர்கள், ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூம் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தும் வெற்றி திரையரங்கில் படம் பார்த்தனர். பின்னர் பேட்டியளித்த கார்த்திக், தலைவர் சும்மா கிழிச்சி தொங்க விட்டாரு என்றார்.

ரஜினிகாந்த் குடும்பத்தினரும், தனுஷ், ராகவா லாரன்ஸ், காளிதாஸ் ஜெயராம், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் ரோஹினி திரையரங்கில் ஜெயிலர் படத்தை பார்த்தனர்.

திருச்சி சோனா மினா திரையரங்குக்கு ஜெயிலர் படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த 72 வயது ரசிகை ஒருவர், ரஜினி பெயரில் அர்ச்சனை செய்து வந்து வந்திருப்பதாக கூறினார்.

திருவண்ணாமலையில் ரஜினி பேனருக்கு பாலாபிஷேகம் செய்து 501 தேங்காய்களை உடைத்து பாபா முத்திரை காட்டி போஸ் கொடுத்தனர் ரசிகர்கள்.

மதுரை தங்க ரீகல் திரையரங்கிற்கு சிறைவாசிகள் போல வேடமணிந்து வந்த ரசிகர்கள், தாங்கள் ரஜினியின் ஆயுட்கால கைதிகள் என்றனர்.

தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் படம் வெளியானதை திருவிழா போல கொண்டாடினர்.

குரோம்பேட்டை வெற்றி திரையரங்கிற்கு வந்த விஜய் ரசிகர் ஒருவரை சூப்பர் ஸ்டார் விஜய் வாழ்க என்று கூறியதாக தெரிகிறது. அவரை ரஜினி ரசிகர்கள் சிலர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments