செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் ஒரு ஆலையை தொடங்குகிறது கோத்ரேஜ்....வேலைவாய்ப்பில் 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு
கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராடக்ட் நிறுவனம், 515 கோடி ரூபாய் முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் ஒரு ஆலையை தொடங்க, தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஆலை மூலம் 446 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அதில் 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும் அந்நிறுவம் கூறியுள்ளது.
புதிய ஆலையில், சோப்புகள், முக அழகு க்ரீம்கள், தலைமுடி பராமரிப்பு சாதனங்கள், கொசு ஒழிப்பான் போன்றவை உற்பத்தி செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Comments