தனிநபர் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் ரூ 250 கோடி வரை அபராதம்; மத்திய அரசு

0 3097

தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் வெளிநடப்புக்கு இடையே மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. இணையதளங்கள், செயலிகள் போன்ற டிஜிட்டல் தளங்களில் தனிநபர்களின் தகவல்களை பாதுகாப்பதாகக் கூறி மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை அறிமுகம் செய்தது.

தனிநபர்களின் தகவல்களை தொழில்நுட்ப நிறுவனங்கள், சமூக வலைதள நிறுவனங்கள் எப்படி கையாள வேண்டும் என்ற வரையறைகளை அந்த மசோதாவில் மத்திய அரசு முன்வைத்தது. இந்த மசோதா நிறைவேறியதன் மூலம் டிஜிட்டல் உலகம் மேலும் நம்பகமான பாதுகாப்பான நிலையை அடைந்திருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments