மத்திய அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசு கிடங்குகளில் இருந்து கோதுமை அரிசி பருப்பு போன்ற ஏழரை மில்லியன் டன் உணவு தானியங்களை வெளிச்சந்தைக்கு விநியோகிக்க உத்தரவு
உணவுப் பொருட்கள், காய்கறிகள் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும் சூழலில், மத்திய அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசு கிடங்குகளில் இருந்து கோதுமை அரிசி பருப்பு போன்ற ஏழரை மில்லியன் டன் உணவு தானியங்களை வெளிச்சந்தைக்கு விநியோகிக்க உத்தரவிட்டுள்ளது.
தானிய வியாபாரிகளுக்கு இவை ஏலத்தில் விடப்படும். இந்திய உணவுக் கழகத்தின் தலைவர் அசோக் மீனா, அரசாங்கத்திடம் 8.7 மில்லியன் டன் கோதுமையும், 20 மில்லியன் டன் அரிசியும் கையிருப்பில் உள்ளது, இது தேவைக்கு போதுமானதை விட அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
விலையைக் குறைக்க அரிசியின் இருப்பு விலையை, ஒரு கிலோ ரூபாய் 31ல் இருந்து ரூபாய் 29 ஆக குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
Comments