நாகையில் தண்ணீரின்றி கருகும் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்...கால்நடைகளை விட்டு மேய்த்து வருவதாக விவசாயிகள் வேதனை.. !!
நாகை மாவட்டத்தில், குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருவதால், விளை நிலங்களில் கால்நடைகளை விட்டு மேய்த்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இம்மாவட்டத்தில் 55 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்துள்ளது. இதில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஆற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில், மேடான பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடைவதில்லை என்பது விவசாயிகளின் வேதனை.
கடன் வாங்கியும் நகைகளை அடகு வைத்தும் சாகுபடி செய்ததாகக் கூறும் அவர்கள், இனி மேலும் கடன் படுவதற்கு சக்தியில்லை என்றனர். வேளாண் அதிகாரிகளோ, வருவாய்த் துறையினரோ கண்டுகொள்ளவில்லை என்பதும் விவசாயிகளின் கவலை.
Comments