கோயம்புத்தூரில் மகளிர் நீதிமன்ற வளாகத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர்... சிறிய கத்தியை காட்டி மிரட்டியவாறு தப்பியவரை விரட்டிப்பிடித்த போலீசார்..

0 1283

 

கோயம்புத்தூரில், சிறைக்கெல்லாம் போக முடியாது என்று கூறி, நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய நபரை, போலீசார் விரட்டிப்பிடித்தனர்.


கோயம்புத்தூர் ரத்தினபுரியைச் சேர்ந்த பஷீர் என்பவர் மீது, கடந்த 2021ஆம் ஆண்டு காஞ்சனா என்பவர் அளித்த புகாரின் கீழ் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்ததால், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, மனைவியுடன் நீதிமன்றத்திற்கு வந்த பஷீரை, போலீசார் கைது செய்ய காத்திருந்தனர்.

இதைக்கண்டு ஆவேசமடைந்த பஷீர், மனைவி பையில் இருந்த சிறிய கத்தியை எடுத்து ரகளையில் ஈடுபட்டதோடு, தன்னை பிடிக்க முயன்ற போலீசாரிடம் தப்பி ஓடினார்.

இவரை, பின்தொடர்ந்து விரட்டிய போலீசார் மடக்கிப் பிடித்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments