ஹவாயில் உள்ள மெளயி தீவில் பயங்கரமாக பரவி வரும் காட்டுத் தீ... காட்டுத் தீ பரவிய பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணி தீவிரம் .

0 1399

அமெரிக்க மாகாணமான ஹவாய் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள மெளயி ((Maui)) தீவில் காட்டுத் தீ பரவி வருகிறது.

டோரா ((Dora)) என்ற சூறாவளி கடுமையாக வீசியதால் தீ வேகமாக பரவியுள்ளது. சுமார் 12,000 பேர் வசிக்கும் லஹைனா பகுதியில், வணிகக் கட்டிடங்களுக்கும் தீ பரவியது.

இதனால் வானுயர கரும்புகை எழுந்தது.

லஹைனாவில் வசிக்கும் மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் அனுப்பப்பட்டுள்ளன.

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments