தி.மு.க. ஆட்சியாளர்களை பெருந்தலைவர் காமராஜரின் சாபம் சும்மா விடாது - அண்ணாமலை
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மாவட்டத்தை, பின்தங்கிய மாவட்டமாக வைத்துள்ள தி.மு.க. ஆட்சியாளர்களை, காமராஜரின் சாபம் சும்மா விடாது என, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரியாபட்டியில் என் மண்; என் மக்கள் யாத்திரையை துவக்கி அவர்மக்களை சந்தித்தார்.
விருதுநகர் பாரதீய ஜனதா கட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரதமாதா சிலையை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணாமலை தனது கையில் கருப்பு பட்டை அணிந்திருந்தார்.
அவருடன் பாதயாத்திரையில் பங்கேற்ற பா.ஜ.க.வினரும் கருப்பு பட்டையுடன் சென்றனர்.
காரியாபட்டி பத்திரபதிவு அலுவலகம் முன்பு துவங்கி, ஜெகஜீவன்ராம் தெரு, பள்ளத்துப்பட்டி, அரசு மருத்துவமனை, கள்ளிக்குடி சாலை, முக்குரோடு, பேருந்து நிலையம் வழியாக பாதயாத்திரை மேற்கொண்டார்.
ஜெக ஜீவன் ராமன் காலணியில், ஓலை பின்னும் குடும்பத்தினரை சந்தித்துப் பேசிய அண்ணாமலை, நாதஸ்வரக் கலைஞர் ஒருவரது வீட்டிற்கும் சென்று, அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். இதையடுத்து, திருச்சுழி பூமிநாதர் கோயிலுக்குச் சென்று அண்ணாமலை, சாமி தரிசனம் செய்தார்.
Comments