தமிழ்நாடு முழுவதும் முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை விழா...கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
ஆடிக்கிருத்திகையையொட்டி தமிழகம் முழுவதும் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசித்தனர்.
இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திரண்ட பக்தர்கள் காவடி எடுத்தும், சாட்டையால் அடித்துக் கொண்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பழனி தண்டாயுதபாணி கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சுவாமிமலை சாமிநாத சுவாமி கோயிலில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள், முருகனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை தரிசித்தனர்.
திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்த முருகனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Comments