சென்னை நகர வீதிகளை ஸ்மார்ட் தெருக்களாக மாற்றுவதற்கான திட்டம்.. இதற்கான நிதியை உலக வங்கி வழங்கவிருப்பதாக தகவல்

0 3205

சென்னை நகர வீதிகளை ஸ்மார்ட் தெருக்களாக மாற்றுவதற்கான திட்டம் தயாராகி வருகிறது.இதற்கான நிதியாக 350 மில்லியன் டாலரை  உலக வங்கி வழங்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மாநகர வீதிகளை பாதுகாப்பான இடங்களாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. 2022 முதல் 2027 வரையிலான ஐந்தாண்டு திட்டமாக இது செயல்படுத்தப்படுகிறது.முதல் கட்டமாக நவீன பார்க்கிங் வசதிகள், டிஜிட்டல் நகரமாக சென்னையை மாற்றுவது உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும். இரண்டாவது கட்டமாக பேருந்து சேவைகள் புறநகர் ரயில் சேவைகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments