உக்ரைனுக்கு செகண்ட் ஹேண்டில் லெப்பர்டு 1 வகை டேங்குகள் விற்பனை...!

0 2423

உக்ரைனுக்கு வழங்க லெப்பர்டு 1 வகை டேங்குகள் தங்களிடம் செகண்ட் ஹேண்டில் வாங்கப்பட்டுள்ளதாக ஆயுத வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு நிறுவனமான OIP லேண்ட் சிஸ்டம்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி, தாங்கள் வாங்கிய ஜெர்மனித் தயாரிப்பான லெப்பர்ட் 1 வகை டேங்குகளில் 50 ஐ மற்றொரு நாட்டிற்கு விற்று விட்டதாகத் தெரிவித்துள்ளார். ரகசியத் தன்மை காரணமாக அந்த நாட்டின் பெயர் மற்றும் கொடுக்கப்பட்ட விலையை வெளியிட முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஆயுதத் தயாரிப்பு நிறுவனமான ரீன்மெட்டால், லெப்பர்டு டேங்குகளை வாங்கியுள்ளதாகவும் அதனை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்ய தயார்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments