மக்களவையில் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி விவாதம்.. இன்று ராகுல்காந்தி விவாதத்தில் பங்கேற்பார் என்று காங். தகவல்

0 2095

மக்களவையில் இன்று இரண்டாவது நாளாக பிரதமர்மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற உள்ளது. இன்றைய அமர்வில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பங்கேற்கிறார்.

ராஜஸ்தானில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்துக்கு செல்ல இருந்த ராகுல் காந்தி விவாதத்தில் கலந்துக் கொண்ட பிறகே அங்கு செல்வார் என்று காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவையில் நேற்று விவாதத்தைத் தொடங்கிவைப்பதாக இருந்த ராகுல்காந்தி அதில் பங்கேற்கவில்லை மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானிஆகியோரும் இன்று விவாதங்களில் பங்கேற்க உள்ளனர். நாளை பிரதமர் மோடி விவாதங்களுக்கு பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments