காசோலை மோசடி வழக்கில் கோச்சடையான் படத் தயாரிப்பாளருக்கு 6 மாதம் சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை அமர்வு நீதிமன்றம்

0 2397

காசோலை மோசடி வழக்கில் கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர் முரளிமனோகருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான கோச்சடையான் திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகருக்கும், அபிர் சந்த் நாகர் என்பவருக்கும் உருவான ஒப்பந்தத்தின் அடிப்படையில் 5 கோடி ரூபாய்க்கு முரளிமனோகர் காசோலையினை வழங்கி இருந்தார்.

ஆனால் அந்த காசோலை வங்கி கணக்கில் பணமில்லாமல் திரும்பி வந்ததை அடுத்து சென்னை விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம்  முரளி மனோகருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்ததை எதிர்த்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments