போராட்டம்ங்கிற பெயர்ல பாட்டிகளை அழைத்து வந்து ஆர்ப்பாட்ட அலப்பறை...! தமிழ்நாட்டுக்கு விமான நிலையம் வேணுமாம்
கன்னியாகுமரி அருகே போராட்டம் என்ற பெயரில் மூதாட்டிகளை இலவச பேருந்தில் வரவழைத்து நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததோடு, எதற்காக வந்திருக்கிறோம் என்பதை கூட சொல்லாததால் சோர்வடைந்தவர்கள் குளிர்பானக் கடைகளைத் தேடிச்செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
வீட்டில் சும்மா இருந்த மூதாட்டியை சேலை தருவதாக அழைத்து வந்து தமிழ் நாட்டுக்கு விமான நிலையம் வேண்டும் என்று போராட வைத்த மனித நேயமே இல்லாத, மனித பாதுகாப்பு கழகம் இது தான்..!
10 மணி ஆர்ப்பாட்டத்துக்கு ப்ரீ பஸ்ல ஏறி 8 மணிக்கெல்லாம் வந்தாச்சி... பணம் தருவாங்களா, சேலை தருவாங்களான்னு தெரியல.. முதல்ல காபியாவது வாங்கி கொடுத்திருகலாமுல்ல என்று சில தாய்மார்கள் அங்கலாய்த்தனர்
ஒரு பக்கம் மனித பாதுகாப்பு கழகம் கன்னியாகுமரியில் விமான நிலையம் வேண்டும் என்று கோஷம் போட்டுக் கொண்டிருக்க... அவர்களுக்கு பின்னால் தலையில் முக்காடு போட்டபடி நின்று கோஷமிட்ட பெண்கள் வெயில் தாங்காமல் ஒவ்வொருவராக அங்கிருந்து நகர்ந்தனர்
அப்படி தப்பிச்சென்று குளிப்பானக்கடையில் , அந்த அமைப்பின் கொடியுடன் தஞ்சம் அடைந்த மூதாட்டி ஒருவரிடம் போராட்டம் குறித்து கேட்டதும் அவர் சொன்ன விளக்கம் போராட்டத்துக்கு, தாய்மார்கள் அழைத்து வரப்படும் டெக்னிக்கை அம்பலப்படுத்தியது.
மூதாட்டித்தான் இப்படி சொல்கிறார் என்று நடுத்தரவயது பெண்மணி ஒருவரிடம் விசாரித்த போது, தெளிவாக பேசிய அவரோ, தங்களை அழைத்து வந்தது , எந்த அமைப்பு என்று தெரியாமல் தாமரை கட்சி என்று டுவிஸ்ட் வைத்தார்
இவர்களையெல்லாம்.. இங்கு அழைத்து வந்த ஆர்ப்பாட்ட நாயகனோ, 4 வது கட்டமாக போராட்டம் நடத்துவதாகவும், பாதுகாப்புக்காக இங்கு விமான நிலையம் வேண்டும் என்றும் வினோத கோரிக்கை வைத்தார்.
Comments