ராஜஸ்தான், கோவா, மகாராஷ்ட்ரா எம்பிக்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!

0 1073

ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்ட்ரா தேசிய ஜனநாயகக்கூட்டணி எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி நேற்று தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் பற்றி மாநிலவாரியாக பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்களுடன் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

நேற்றைய கூட்டத்தில் எம்பிக்களிடம் பேசிய மோடி மக்களிடம் நலத்திட்டங்களைப் பற்றி எடுத்துரைக்குமாறு அறிவுறுத்தினார். மோடியின் உத்தரவாதத்தை மக்களுக்கு சொல்லுங்கள் என்றும் அவர் கூறினார்.

கோவா, மகாராஷ்ட்ரா பாஜக எம்பிக்களிடம் பேசிய மோடி ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அணியுடன் ஒற்றுமையுடன் செயல்படுமாறு வலியுறுத்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments