சினிமா ஷூட்டிங் இல்லைங்க.. வந்தது ‘ராக்கெட் ராஜா’.. பரபரத்த நெல்லை நீதிமன்றம்..! தேர்தலில் போட்டி என அறிவிப்பு

0 2766

சினிமா ஷூட்டிங் போகும் கதாநாயகன் போல கொலை வழக்கு ஒன்றின் விசாரணைக்கு ஆஜராவதற்காக பிரமாண்ட பென்ஸ் கேரவனில் ராக்கெட்ராஜா வந்திறங்கியதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் 2018 ம் ஆண்டு நடந்த பேராசிரியர் செந்தில் குமார் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு , இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பனங்காட்டு படை கட்சியின் நிறுவன தலைவர் ராக்கெட் ராஜா உள்ளிட்ட 7 பேர் நெல்லை மாவட்ட வன்கொடுமை நீதிமன்றத்தில் இன்று ஆஜராக இருப்பதாக தகவல் வந்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது

பெண்களின் வாகனங்களை கூட போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். இந்த நிலையில் போலீஸ் பாதுகாப்பு வாகனத்துடன் பிரமாண்ட பென்ஸ் கேரவன் ஒன்று நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்தது. ஏதோ ஷூட்டிங் போல என்று பலரும் வியந்து பார்க்க, அந்த பேருந்தில் இருந்து ராக்கெட் ராஜா தன் சகாக்களுடன் இறங்கினார்.

50 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் புடை சூழ சென்ற ராக்கெட் ராஜா உள்ளிட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராயினர். இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 11ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராக்கெட் ராஜா, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பனங்காட்டு மக்கள் படை கட்சி யாரையும் ஆதரிக்காது என்றும் வருகின்ற் 2026 சட்ட மன்ற தேர்தலில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் தான் போட்டுயிடுவேன் என்று கூறிச்சென்றார்.

விசாரணை கைதிகளை மட்டுமே போலீஸ் வாகனத்தில் அழைத்து வர இயலும் என்றும் மற்றபடி ராக்கெட் ராஜா போன்ற உயிருக்கு அச்சுருத்தல் இருக்கும் நபர்கள் பாதுகாப்பு கருதி அவர்களது வாகனத்தில் வருவதற்கு சிறப்பு அனுமதி பெற்று வரலாம் என்று போலிசார் விளக்கம் அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments