அமைதியாக இருக்கும் விவசாயிகள், மக்களை அன்புமணி தூண்டிவிடுகிறார் அமைச்சர் குற்றச்சாட்டு
சென்னையில் வீராவேசம் செய்யும் அன்புமணி, டெல்லியில் கைக்கட்டி அமைதி காப்பது ஏன் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “என்.எல்.சி விரிவாக்கத் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை” என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி மாநிலங்களவையில் அறிவித்திருப்பதாக கூறியுள்ளார்.
அமைச்சர் அறிவித்த பிறகு குறைந்தபட்சம் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பாவது அன்புமணி செய்திருக்க வேண்டாமா? என எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வினவியுள்ளார்.
அப்படி அவசரப்பட்டால் மருத்துவக் கல்லூரி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை தன் வீட்டுக்கதவை தட்டும் என்பது அவருக்கு தெரியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
என்.எல்.சி. மற்றும் மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இழப்பீட்டுத் தொகையை தி.மு.க. அரசு உயர்த்திக் கொடுக்க வைத்ததாகவும், ஏற்கனவே இழப்பீடு பெற்றவர்களுக்கு கூடுதல் தொகை பெற்றுத் தந்ததாகவும் அவர் விளக்கியுள்ளார்.
இதை பொறுக்க முடியாத அன்புமணி போராட்டம் என்ற பெயரில் போலீசார் மீது கல்வீசி, விவசாயிகள், மக்களை தூண்டிவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments