படியில் தொங்கியவாறு பயணித்த மாணவ-மாணவிகள்....நடுவழியில் நிறுத்திய பேருந்து ஓட்டுநரிடம் மாணவர்கள் வாக்குவாதம்

0 2174

போதுமான பேருந்து வசதி இல்லாததால் பல்வேறு இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர்நாயக்கர்பட்டியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் படிப்பதற்காக தஞ்சை மாவட்டம் மருங்குளத்திற்கு அதிகமாக சென்று வருகின்றனர்.

கிடைத்த ஒரே அரசுப் பேருந்தில் அதிகமானோர் ஏறியதால் படிக்கட்டிலும் தொங்கும் நிலை ஏற்பட்டது.

இதனால், பாதி வழியில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநரிடம் மாணவ-மாணவிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த போலீஸார் மாணவிகளை சமாதானப்படுத்தி அதே பேருந்தில் அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments