ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு...செயலிழக்கச் செய்யும் பணிகள் தீவிரம்
இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்டு வெடிக்காத நிலையில் இருந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஜெர்மனியின் டுஸல்டார்ஃப் நகரில் 13 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அங்குள்ள உயிரியல் பூங்கா அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்றபோது ஒரு டன் எடையிலான குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரை கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்திரவிடப்பட்டுள்ளது.
வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு விமானப்படைகளால், ஜெர்மனி மீது 13 லட்சம் டன் எடையிலான குண்டுகள் வீசப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Comments