மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது...மக்களவையில் பா.ஜ.க. எம்.பி.,க்கள் முழக்கத்தால் காங்கிரஸார் எதிர் முழக்கம்

0 1434

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

தீர்மான நோட்டீஸ் வழங்கிய காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் விவாதத்தை துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், மணிப்பூர் விவகாரத்தை ஏதோ வடகிழக்கு மாநிலத்தில் நடக்கும் சம்பவம் என புறந்தள்ளக் கூடாது என்றும் மணிப்பூர் பற்றி எரிகிறது என்றால் இந்தியாவே எரிகிறது என்று தான் அர்த்தம் என்றும் கூறியுள்ளார்.

பலத்தை நிரூபிப்பதற்காக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவில்லை என்றும், மணிப்பூருக்கு நீதி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கவுரவ் கோகாய் குறிப்பிட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் உரையாற்றுகின்றனர்.

முன்னதாக, ராகுல் காந்தி விவாதத்தை தொடங்கி வைக்காததது ஏன் என கேள்வி எழுப்பி பா.ஜ.க. எம்.பி.க்கள் முழக்கமிட்டத்தை அடுத்து, பிரதமர் எங்கே என காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்முழக்கம் எழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments