செந்தில் பாலாஜியிடம் ஆகஸ்ட்-12 வரை விசாரணை நடத்த ஒரு பெண் அதிகாரி உள்பட 3 அதிகாரிகள் விசாரணைக்கு அனுமதி..
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்திவருகின்றனர்.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் நேற்று மாலை அனுமதி அளித்து. இதையடுத்து செந்தில் பாலாஜியை புழல் சிறையிலிருந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் சாஸ்திரி பவனுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
அங்குள்ள விசாரணை அறையில் வைத்து அவரிடம் ஒரு பெண் அதிகாரி உள்பட 3 அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டுவருவதாகவும், யாரிடமிருந்து பணம் பெறப்பட்டது, யார் யார் மூலம் பெறப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Comments