இலங்கை விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு

0 1406


இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான சிறிய பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி உள்பட இருவர் உயிரிழந்தனர்.

தமிழர்கள் அதிகம் வாழும் வடகிழக்குப் பகுதியில் உள்ள திரிகோணமலை விமானப்படைத் தளத்தில் இருந்து சீனத் தயாரிப்பான PT-6 என்ற சிறிய ரக பயிற்சி விமானம் புறப்பட்டுச் சென்றது.ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் பயணித்த விமானி மற்றும் ஒரு பொறியாளர் ஆகியோர் விபத்தில் உயிரிழந்ததாக விமானப்படை மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments