புகுஷிமா அணு உலையை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட நீரை இம்மாத இறுதியில் கடலில் கலக்க ஜப்பான் திட்டம்
புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட அணுசக்தி கழிவை இம்மாத இறுதியில் கடலில் திறந்துவிட ஜப்பான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு சுனாமியால் புகுஷிமா அணுமின் நிலையம் சேதமடைந்து கதிர் வீச்சு ஏற்பட்டது. அப்போது அணு உலையை குளிர்விக்க பயன்படுத்திய தண்ணீரை, சுத்திகரித்து கடலில் கலக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. அதனை கடலில் கலப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த தண்ணீர் பாதுகாப்பானது தான் என ஜப்பானும், சர்வதேச அணுசக்தி முகமையும் கூறுகின்றன.
இந்நிலையில், அடுத்த வாரம் ஜப்பான் பிரதமர், அமெரிக்கா மற்றும் தென்கொரிய அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின், அந்த தண்ணீர் கடலில் திறந்துவிடப்படும் என கூறப்படுகிறது.
Comments