மாம்பலம் ரயில் நிலையம் அருகே நெல்லை எக்ஸ்பிரஸ் மோதி இளைஞர் உயிரிழப்பு.. ரயில்வே ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் புதரில் கிடந்த சடலம் மீட்பு.. !!
சென்னை மாம்பலம் ரயில் நிலையம் அருகே நெல்லை விரைவு ரயில் மோதி உயிரிழந்த இளைஞரின் சடலம், பரமாரிப்பு பணிக்காக சென்ற ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் மீட்கப்பட்டது.
நெல்லை விரைவு ரயில் சனிக்கிழமை இரவு மாம்பலம் ரயில் நிலையத்தை கடந்துச் சென்ற போது, தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் ஒருவர் மீது மோதிவிட்டதாக ரயிலின் ஓட்டுநர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனே போலீசார் அங்கு சென்று பார்த்த போது சடலம் ஏதும் கிடைக்கவில்லை. இதனால், ரயில் ஓட்டுநர் தவறுதலாக தகவல் தெரிவித்திருக்கலாம் என்றெண்ணி போலீசார் இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தண்டவாள பரமாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் புதரில் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
விசாரணையில் அவர் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 19 வயதான ஜோசப் என்பது தெரியவந்தது. 2 நாட்களாக ஜோசப்பை காணாமல் தேடி அலைந்த உறவினர்கள், அவரது சடலத்தைக் கண்டு கதறியழுதனர்.
Comments