டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா இன்று மக்களவையில் விவாதம்
டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா இன்று மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
கடந்த 3ம் தேதியன்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்தார்.
தனிநபர்களின உரிமையை இந்த மசோதா பறிப்பதாகக் கூறி எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
எதிர்க்கட்சியினரின் அனைத்து கேள்விகளுக்கும் விவாதத்தின் போது பதிலளிக்கப்படும் என்று அமைச்சர் அஸ்வனி உறுதியளித்துள்ளார்.
பல்வேறு தரப்பினரின் கருத்துகளையடுத்து கடந்த ஆண்டு இந்த மசோதா திரும்பப் பெறப்பட்டது.
பல்வேறு நிறுவனங்கள், தனிநபர்கள், அரசியல் கட்சிகளின் கருத்தை அறிந்து திருத்தப்பட்ட புதிய மசோதா கடந்த 3ம் தேதி தாக்கலாகியுள்ளது.
தனிநபர் தரவு பாதுகாப்பு விதிகளை மீறினால் அல்லது நியாயமான பாதுகாப்புப் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறினால், 250 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க இந்த புதிய மசோதா இடமளிக்கிறது.
Comments