நிலவின் மேற்பரப்பை படம்பிடித்து அனுப்பியது சந்திரயான் - 3 விண்கலம்

0 23236

நிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் நிலவு குறித்தான முதல் காட்சிகள் சிலவற்றை படம் பிடித்து அனுப்பியுள்ளது.

படிப்படியாக சந்திரனின் தூரத்தைக் குறைக்கும் பணியில் திட்டமிட்டு வெற்றிகரமாக செயல்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று சந்திரயான் 3 விண்கலத்தை உள்வட்டப் பாதையில் உந்தி செலுத்தி சந்திரனை நெருங்கவைத்தனர். சந்திராயன் விண்கலம் இப்போது நிலவுக்கு 4 ஆயிரத்து 300 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மீண்டும் இதுபோன்ற திட்டமிட்ட முன்னகர்வு நாளை பிற்பகல் 1 மணி முதல் 2 மணிக்குள் நடைபெறும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திரயான் 3 நிலவில் இறங்கி ஒரு நாள் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. நிலவின் ஒருநாள் என்பது பூமியின் 14 நாட்களுக்கு நிகரானது.

சந்திரயான் 2 நிலவில் இறங்கி சேதம் அடைந்ததையடுத்து சந்திரயான் 3 திட்டம் இஸ்ரோ விஞ்ஞானிகளால் 250 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ரஷ்யா சீனாவைத் தொடர்ந்து வெற்றிகரமாக சந்திரனில் கால்பதிக்கும் நான்காவது நாடாக இந்தியா உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments