அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்கள்.. தமிழகத்தில் மட்டும் 18 ரயில் நிலையங்கள் ரூ.381 கோடியில் மேம்பாடு.. !!
அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் மட்டும் 616 கோடி ரூபாயில் 25 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் பணிகளுக்கு காணொலி வாயிலாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதில் தமிழகத்தில் மட்டும் 18 ரயில் நிலையங்கள் 381 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படவுள்ளன. அதேபோல் புதுச்சேரியில் ஒரு ரயில் நிலையத்துக்கு 93 கோடியும் கேரளாவில் 5 நிலையங்களுக்கு 123 கோடி ரூபாயும் கர்நாடகாவில் மங்களூரு ரயில் நிலையத்துக்கு 19 கோடியும் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் நவீன நடை மேடைகள், நடை மேம்பாலங்கள், நவீன கழிவறைகள், மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், விசாலமான வாகன நிறுத்தங்கள், கண்காணிப்பு கேமராக்கள், நுழைவு வாயில் கட்டமைப்புகள் நவீன முறையில் மேம்படுத்தப்படவுள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளன. அந்தந்த ஊர்களின் சிறப்புகளை பிரதிபலிக்கும் வகையில் ரயில் நிலையங்களின் தோற்றம் கட்டமைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தை அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Comments